ஊழியம் முடித்து
உறங்கும் உடலில்
வீசியெறிந்துப்போன
வேசிக்கான
ஊதியம்..
பஞ்சு விரல்களில்
பீடிக்கு நுால் சுற்றி
கன்னிப்போன
பிஞ்சுக் கைகள்
பெற்றுக்கொண்ட
பாதிக் கூலி..
இல்லத்துணைவியை
இல்லத்தில் வைக்க
தாம்பூலத்தட்டில்
தரகு செய்யப்பட்ட
மணமகன்
விற்ற பணம்..
வலியோன் ஒருவன்
எளியோனிடம்
வலிமை காட்டி
ஆக்கிரமித்த
விளைநிலம்..
என்பதற்கு
சற்றும்
சளைத்ததில்லை…
எலும்பு
தசை நீக்கி
வெற்றுத்தோல் உள்ளே
வைக்கோல் நிரப்பிய
கன்றின் உருவம்
ஒன்றினைக் காட்டி
பசுவிடமிருந்து கறந்த
பால்….!
உறங்கும் உடலில்
வீசியெறிந்துப்போன
வேசிக்கான
ஊதியம்..
பஞ்சு விரல்களில்
பீடிக்கு நுால் சுற்றி
கன்னிப்போன
பிஞ்சுக் கைகள்
பெற்றுக்கொண்ட
பாதிக் கூலி..
இல்லத்துணைவியை
இல்லத்தில் வைக்க
தாம்பூலத்தட்டில்
தரகு செய்யப்பட்ட
மணமகன்
விற்ற பணம்..
வலியோன் ஒருவன்
எளியோனிடம்
வலிமை காட்டி
ஆக்கிரமித்த
விளைநிலம்..
என்பதற்கு
சற்றும்
சளைத்ததில்லை…
எலும்பு
தசை நீக்கி
வெற்றுத்தோல் உள்ளே
வைக்கோல் நிரப்பிய
கன்றின் உருவம்
ஒன்றினைக் காட்டி
பசுவிடமிருந்து கறந்த
பால்….!
No comments:
Post a Comment