Thursday, 7 November 2013






எட்டுக்கு இடையே
ஊடு புள்ளி
ஒனபது என்னும்
உரையாடல்களோடு,

தமக்கை ஒருவளின்
கோலமிடக்
கற்றுக்கொள்ளும்
வைபவத்திற்கு,

ஒற்றைப் பக்க
வெற்றிடமாய்
பயன்பட்டுக்கொண்டிருக்கிறது….

மொட்டை மாடி,
நண்பன் வீடு,
ரயில் நிலைய
நடைமேடை இருக்கை,
பள்ளி மரத்தடி,
வகுப்பு மேசை,

இன்னும் சில
விட்டுப்போன
இடங்களிலும்,

படம் வரைந்து,
பாகங்கள் குறித்து,
விரல் வலிக்க
எல்லாமும் எழுதி,
வண்ணத்தில்
கண்ணாடி காகிதம்
அணிவித்து,

பள்ளி இறுதியாண்டில்
தேர்வுக்கு சமர்ப்பித்த
செயல்முறை ஏடு ஒன்று..

No comments:

Post a Comment