Friday, 8 November 2013
Thursday, 7 November 2013

அண்டை வீட்டுக்காரன் அவன்..
மண்டையோடுகள் கோர்த்து
மாலையணிந்து கொண்ட பேரழகன்..
எம் தமக்கை ஒருவளை கற்பழித்ததன்
அடையாளமாய் தாவணி உருவி
தோளில் சுற்றிக்கொண்ட
சுந்தர வதனன்…
அவன் உதடுகளில்
எப்போதும் புகைந்துகொண்டிருக்கும்..
எம் தம்பியொருவனின்
துண்டிக்கப்பட்டதொரு உறுப்பு…
எங்கள் வீடுகளுக்கு வந்து போகிற
சிட்டுக்குருவிகளை
வேட்டையாடி விளையாடுதல் அவனது
சுகமானதொரு பொழுதுபோக்கு..
என் தமையனின்
கண்களை முன்னால் கட்டி
கைகளை பின்னால் கட்டி
புறமுதுகில் சுடுகின்ற
ஆண்மைத்தன விளையாட்டுகளில்
ஆழ்ந்த அனுபவம் கொண்டவன்..
என் தங்கைகளின்
மார்பு கிழித்து
மஞ்சள் நிறத்தில் ஏதும்
ரத்தம் வருகிறதா என
சந்தேகம் தீர்த்து கொள்கிற
சந்தோஷ விளையாட்டுக்காரன்..
இவன் ஆலகால விளையாட்டுகளுக்கு உன்
அன்னை ஒன்றும் சொன்னதில்லையா.?
எனக் கேட்கிறீா்கள்..
அடிக்கடி சொன்னதுண்டு..
அவசியம் சொல்கிறேன்..
என் உறவுகளின்
விரல்களுக்கு வலிக்காமல்
நகம் பிடுங்கி விளையாடுமாறு
ஆண்டு முழுவதும்
அவனுக்கு
அறிவுறுத்தியிருக்கிறாள்...
ஒரு கண்ணை குருடாக்கிவிட்டு,
மறுகண்ணை
மறுதினம்தான் தோண்டவேண்டுமென,
அச்சுறுத்தும் வகையில்
ஆணையிட்டிருக்கிறாள்..
குண்டெறிகிற விளையாட்டுகளில்,
ஆயிரம், இரண்டாயிரமென்று கொஞ்சமாய்
உயிரிழப்பு நடந்தால்,
சிறப்பு பூஜையிட்டுதான்
புதைக்க வேண்டுமென
நல்லிணக்கத்துடன்
சொல்லியிருக்கிறாள்..
அண்டை வீட்டுக்காரனுடன் உன்
அன்னைக்கென்ன தொடா்பென கேட்கிறீர்கள்..?
அதெல்லாம் சொல்வதற்க்கில்லை..
வாசலுக்கு வெளியே நாங்கள்
விலங்கிட்டு கிடப்பதால்,
பின்வாசல் ரகசியங்கள்
முன்னுக்கு வருவதே இல்லை..
அப்புறம்..
”கள்ளக்காதலுக்கு இடையூராக இருக்குமென,
காதலனுடன் சேர்ந்து
பிள்ளைகளைக் கொன்ற தாய்” என்று
பத்திரிகை செய்தி ஏதேனும் பார்த்தால்,
பதட்டமடையாதீர்கள்..
நடிகை ஒருவள்
இடுப்புக்கு கீழே
இறங்கிப்போகும் உடையோடு
இருக்கும் பக்கத்திற்க்கு
இயல்பாக தாவிவிடுங்கள்….!
மண்டையோடுகள் கோர்த்து
மாலையணிந்து கொண்ட பேரழகன்..
எம் தமக்கை ஒருவளை கற்பழித்ததன்
அடையாளமாய் தாவணி உருவி
தோளில் சுற்றிக்கொண்ட
சுந்தர வதனன்…
அவன் உதடுகளில்
எப்போதும் புகைந்துகொண்டிருக்கும்..
எம் தம்பியொருவனின்
துண்டிக்கப்பட்டதொரு உறுப்பு…
எங்கள் வீடுகளுக்கு வந்து போகிற
சிட்டுக்குருவிகளை
வேட்டையாடி விளையாடுதல் அவனது
சுகமானதொரு பொழுதுபோக்கு..
என் தமையனின்
கண்களை முன்னால் கட்டி
கைகளை பின்னால் கட்டி
புறமுதுகில் சுடுகின்ற
ஆண்மைத்தன விளையாட்டுகளில்
ஆழ்ந்த அனுபவம் கொண்டவன்..
என் தங்கைகளின்
மார்பு கிழித்து
மஞ்சள் நிறத்தில் ஏதும்
ரத்தம் வருகிறதா என
சந்தேகம் தீர்த்து கொள்கிற
சந்தோஷ விளையாட்டுக்காரன்..
இவன் ஆலகால விளையாட்டுகளுக்கு உன்
அன்னை ஒன்றும் சொன்னதில்லையா.?
எனக் கேட்கிறீா்கள்..
அடிக்கடி சொன்னதுண்டு..
அவசியம் சொல்கிறேன்..
என் உறவுகளின்
விரல்களுக்கு வலிக்காமல்
நகம் பிடுங்கி விளையாடுமாறு
ஆண்டு முழுவதும்
அவனுக்கு
அறிவுறுத்தியிருக்கிறாள்...
ஒரு கண்ணை குருடாக்கிவிட்டு,
மறுகண்ணை
மறுதினம்தான் தோண்டவேண்டுமென,
அச்சுறுத்தும் வகையில்
ஆணையிட்டிருக்கிறாள்..
குண்டெறிகிற விளையாட்டுகளில்,
ஆயிரம், இரண்டாயிரமென்று கொஞ்சமாய்
உயிரிழப்பு நடந்தால்,
சிறப்பு பூஜையிட்டுதான்
புதைக்க வேண்டுமென
நல்லிணக்கத்துடன்
சொல்லியிருக்கிறாள்..
அண்டை வீட்டுக்காரனுடன் உன்
அன்னைக்கென்ன தொடா்பென கேட்கிறீர்கள்..?
அதெல்லாம் சொல்வதற்க்கில்லை..
வாசலுக்கு வெளியே நாங்கள்
விலங்கிட்டு கிடப்பதால்,
பின்வாசல் ரகசியங்கள்
முன்னுக்கு வருவதே இல்லை..
அப்புறம்..
”கள்ளக்காதலுக்கு இடையூராக இருக்குமென,
காதலனுடன் சேர்ந்து
பிள்ளைகளைக் கொன்ற தாய்” என்று
பத்திரிகை செய்தி ஏதேனும் பார்த்தால்,
பதட்டமடையாதீர்கள்..
நடிகை ஒருவள்
இடுப்புக்கு கீழே
இறங்கிப்போகும் உடையோடு
இருக்கும் பக்கத்திற்க்கு
இயல்பாக தாவிவிடுங்கள்….!

தேங்காய் உடைத்து,
திருநீறு பூசி
திரும்பியதும்,
தெருமுனையில் நின்று
தேநீர் வாங்கித்தர வேண்டுமாய்
கைநீட்டினார் கடவுள்.
தேநீருக்கான
தேவை எனக்கும் இருந்ததால்,
இருவருக்குமாய் சேர்த்து
சொல்லி முடிக்கும் முன்
இடைமறித்த கடவுள்,
”எனக்கு மட்டும்
சர்க்கரை துாக்கலாய் ” என்று
சங்கடமாய் சிரித்தார்.
தேநீர் முடிந்ததும்.
”நெற்றியில் ஏன் சிலுவை குறியீடு”
என்றேன்..
”இன்று போகிற
வீதிகள் அப்படி….
நேற்று கூட
நெற்றியில்
பிறைநிலா போட்டிருந்தேன்”
என்றார்.
தேநீருக்கு நன்றி சொல்லி
தெருவழி
திரும்பினார் கடவுள்.
அவசரமாய்...
காசு கொடுத்து
திரும்பிபோதுதான்
கவனித்தேன்..
தேநீர் கடை
திண்டில் தவறவிட்டிருந்த
கடவுளின்
கதை ஆயுதத்தை...
கண்ணுக்கெட்டிய துாரத்தில்
போகிற கடவுளை
என்ன பெயரிட்டு
அழைப்பதென
யோசித்து முடிக்கும் முன்,
வீதியின் இறுதியிலிருக்கும்
விறகுக்கடை சந்தில்,
நுழைந்து…
காணாமல் போனார்
கடவுள்….!
திருநீறு பூசி
திரும்பியதும்,
தெருமுனையில் நின்று
தேநீர் வாங்கித்தர வேண்டுமாய்
கைநீட்டினார் கடவுள்.
தேநீருக்கான
தேவை எனக்கும் இருந்ததால்,
இருவருக்குமாய் சேர்த்து
சொல்லி முடிக்கும் முன்
இடைமறித்த கடவுள்,
”எனக்கு மட்டும்
சர்க்கரை துாக்கலாய் ” என்று
சங்கடமாய் சிரித்தார்.
தேநீர் முடிந்ததும்.
”நெற்றியில் ஏன் சிலுவை குறியீடு”
என்றேன்..
”இன்று போகிற
வீதிகள் அப்படி….
நேற்று கூட
நெற்றியில்
பிறைநிலா போட்டிருந்தேன்”
என்றார்.
தேநீருக்கு நன்றி சொல்லி
தெருவழி
திரும்பினார் கடவுள்.
அவசரமாய்...
காசு கொடுத்து
திரும்பிபோதுதான்
கவனித்தேன்..
தேநீர் கடை
திண்டில் தவறவிட்டிருந்த
கடவுளின்
கதை ஆயுதத்தை...
கண்ணுக்கெட்டிய துாரத்தில்
போகிற கடவுளை
என்ன பெயரிட்டு
அழைப்பதென
யோசித்து முடிக்கும் முன்,
வீதியின் இறுதியிலிருக்கும்
விறகுக்கடை சந்தில்,
நுழைந்து…
காணாமல் போனார்
கடவுள்….!

ஒரு
பொதுநுாலகத்து
வாயிலில்
உள்நுழைகிற
உனக்கும் எனக்குமான
இடைவெளி
மிக சொற்பமானது..
அடுக்கி வைத்த
புத்தகங்களை
எதிரெதிர் திசையில்
எடுத்த இடைவெளியில்
சந்தித்தக்கொள்ளும்
நமது கண்களுக்கு
பின்னால்
ஒரு கவிதை
ஒளிந்திருக்கிறது..
இரண்டு
அடுக்குகளுக்கு
ஒருமுறை வீதம்
இருவரும்
கடந்து செல்வதை
தற்செயலென்று
சொல்வதற்கில்லை…
கையிலெடுத்து
புரட்டும் புத்தகம்
எதுவென்பதை
பரஸ்பரம்
அறிந்துகொள்ளும்
ஆர்வம்
பரமபத விளையாட்டிற்கு
ஒப்பானது…
நெடுநேர
தேடல்களுக்கு பின்பு
உனக்கும் எனக்கும்
பிடித்த புத்தகங்களுடன்
வெளியேறுகிறோம்
இருவரும்…
நுாலகத்திற்கு வெளியே
இரவல் புத்தகத்தை
இருவரும்
பறிமாறிக் கொண்ட
காரணம் காட்டி
பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
தேநீர் நேரமொன்று..
சம அளவில் கலந்திருக்கும்
சர்க்கரைக்கும், தேயிலை சாறுக்கும்,
இணையாகவே
அப்போது
சம அளவில் கலந்திருக்கிறது
காதலும், நட்பும்…!

செடி கொடிகள்
சிதைத்து
பழமரங்கள்
புதைத்து
சிட்டுக்குருவிக்கென
தினம் ஒன்று
கொண்டாடலாம்..
மலர் செடிகள்
மழித்து
பட்டுத்துணிக்கு மட்டும்
கூட்டுப்புழு வளர்த்து
வண்ணத்துப்பூச்சிகளுக்கு
என்றும்
தினம் ஒன்று
கொண்டாடலாம்..
விளைநிலம் ஒழித்து
வணிக மனையாக்கி
பசுமை வெளியெங்கும்
கழிவு விசிறி
கட்டாந்தரையாக்கி
கால்நடைகளுக்கும்
தினமொன்று
கொண்டாடலாம்..
விலங்குகள்
பறவைகள்
ஒட்டுமொத்தமாய்
ஒவ்வொன்றின்
வசிப்பிடம் அழித்து
ஒவ்வொன்றுக்கெனவும்
ஒரு தினம்
கொண்டாடலாம்..
பலமுள்ளது
பிழைக்குமென்னும்
பலாத்கார நியதிகள்
கடந்துபோய்
பின்னாளில்
மனித தினம் ஒன்று
கொண்டாடப்படலாம்..
மிச்சமாக ஏதேனும்
மனிதன் இருந்தால்…!
சிதைத்து
பழமரங்கள்
புதைத்து
சிட்டுக்குருவிக்கென
தினம் ஒன்று
கொண்டாடலாம்..
மலர் செடிகள்
மழித்து
பட்டுத்துணிக்கு மட்டும்
கூட்டுப்புழு வளர்த்து
வண்ணத்துப்பூச்சிகளுக்கு
என்றும்
தினம் ஒன்று
கொண்டாடலாம்..
விளைநிலம் ஒழித்து
வணிக மனையாக்கி
பசுமை வெளியெங்கும்
கழிவு விசிறி
கட்டாந்தரையாக்கி
கால்நடைகளுக்கும்
தினமொன்று
கொண்டாடலாம்..
விலங்குகள்
பறவைகள்
ஒட்டுமொத்தமாய்
ஒவ்வொன்றின்
வசிப்பிடம் அழித்து
ஒவ்வொன்றுக்கெனவும்
ஒரு தினம்
கொண்டாடலாம்..
பலமுள்ளது
பிழைக்குமென்னும்
பலாத்கார நியதிகள்
கடந்துபோய்
பின்னாளில்
மனித தினம் ஒன்று
கொண்டாடப்படலாம்..
மிச்சமாக ஏதேனும்
மனிதன் இருந்தால்…!

ஊழியம் முடித்து
உறங்கும் உடலில்
வீசியெறிந்துப்போன
வேசிக்கான
ஊதியம்..
பஞ்சு விரல்களில்
பீடிக்கு நுால் சுற்றி
கன்னிப்போன
பிஞ்சுக் கைகள்
பெற்றுக்கொண்ட
பாதிக் கூலி..
இல்லத்துணைவியை
இல்லத்தில் வைக்க
தாம்பூலத்தட்டில்
தரகு செய்யப்பட்ட
மணமகன்
விற்ற பணம்..
வலியோன் ஒருவன்
எளியோனிடம்
வலிமை காட்டி
ஆக்கிரமித்த
விளைநிலம்..
என்பதற்கு
சற்றும்
சளைத்ததில்லை…
எலும்பு
தசை நீக்கி
வெற்றுத்தோல் உள்ளே
வைக்கோல் நிரப்பிய
கன்றின் உருவம்
ஒன்றினைக் காட்டி
பசுவிடமிருந்து கறந்த
பால்….!
உறங்கும் உடலில்
வீசியெறிந்துப்போன
வேசிக்கான
ஊதியம்..
பஞ்சு விரல்களில்
பீடிக்கு நுால் சுற்றி
கன்னிப்போன
பிஞ்சுக் கைகள்
பெற்றுக்கொண்ட
பாதிக் கூலி..
இல்லத்துணைவியை
இல்லத்தில் வைக்க
தாம்பூலத்தட்டில்
தரகு செய்யப்பட்ட
மணமகன்
விற்ற பணம்..
வலியோன் ஒருவன்
எளியோனிடம்
வலிமை காட்டி
ஆக்கிரமித்த
விளைநிலம்..
என்பதற்கு
சற்றும்
சளைத்ததில்லை…
எலும்பு
தசை நீக்கி
வெற்றுத்தோல் உள்ளே
வைக்கோல் நிரப்பிய
கன்றின் உருவம்
ஒன்றினைக் காட்டி
பசுவிடமிருந்து கறந்த
பால்….!

எட்டுக்கு இடையே
ஊடு புள்ளி
ஒனபது என்னும்
உரையாடல்களோடு,
தமக்கை ஒருவளின்
கோலமிடக்
கற்றுக்கொள்ளும்
வைபவத்திற்கு,
ஒற்றைப் பக்க
வெற்றிடமாய்
பயன்பட்டுக்கொண்டிருக்கிறது….
மொட்டை மாடி,
நண்பன் வீடு,
ரயில் நிலைய
நடைமேடை இருக்கை,
பள்ளி மரத்தடி,
வகுப்பு மேசை,
இன்னும் சில
விட்டுப்போன
இடங்களிலும்,
படம் வரைந்து,
பாகங்கள் குறித்து,
விரல் வலிக்க
எல்லாமும் எழுதி,
வண்ணத்தில்
கண்ணாடி காகிதம்
அணிவித்து,
பள்ளி இறுதியாண்டில்
தேர்வுக்கு சமர்ப்பித்த
செயல்முறை ஏடு ஒன்று..
Subscribe to:
Posts (Atom)
